Paristamil Navigation Paristamil advert login

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறப்பு

குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் திறப்பு

1 புரட்டாசி 2025 திங்கள் 16:25 | பார்வைகள் : 198


குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் யாழ்ப்பாண பிராந்திய அலுவலகம் இன்று திறந்து வைக்கப்பட்டது.

யாழ்ப்பாண மாவட்டச்செயலக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இவ்அலுவலகம் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இன்று திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் பாராளுமன்ற அலுவல்கள் அமைச்சர் ஆனந்த விஜேபால, கடற்றொழில் நீரியல் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர், வடக்குமாகாண ஆளுனர் நாகலிங்கம் வேதநாயகன், பிரதியமைச்சர்களான சுனில் வட்டஹல, பாராளுமன்ற உறுப்பினர்களான ம.ஜெகதீஸ்வரன், க.இளங்குமரன், எஸ்.ஸ்ரீபவானந்தராஜா, ஜெ.றஜீவன், மற்றும் சிவிகே சிவஞானம் அமைச்சின் செயலாளர்கள், பிரதம செயலாளர் உள்ளிட்ட திணைக்களத் தலைவர்கள் கலந்துகொண்டனர்.

குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஐ.சமிந்த பத்திராஜ ,யாழ் மாவட்டச் செயலாளர் மருதலிங்கம் பிரதீபன், பிரதியமைச்சர்கள், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் அரச அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

யாழ். மாவட்டச் செயலகத்தின் 60 ஆவது ஆண்டு பூர்த்தயினை முன்னிட்டு முத்திரையும் தபால் தலையும் வெளியிடப்பட்டது.

வர்த்தக‌ விளம்பரங்கள்