ரவிக்குமார் இயக்கத்தில் நடிக்கும் சூரி?

1 புரட்டாசி 2025 திங்கள் 16:55 | பார்வைகள் : 192
தமிழ் திரையுலகின் முதல் முழுநீள டைம் மிஷின் திரைப்படமான 'இன்று நேற்று நாளை' திரைப்படம் கடந்த 2015ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த படத்தின் இயக்குனர் ரவிக்குமார் அதையடுத்து ஐந்து ஆண்டுகளுக்கும் மேல் உருவாக்கிய அயலான் படம் கடந்த ஆண்டு ரிலீஸானது. ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை.
இதையடுத்து அவரது அடுத்த படத்தைத் தொடங்குவதில் சிக்கல் உருவானது. அவர் அடுத்து சூர்யா, கார்த்தி மற்றும் விஜய் சேதுபதி ஆகியோருக்குக் கதை சொன்னார். ஆனால் அந்த கதைகள் அடுத்தகட்டம் நோக்கி நகரவில்லை.
இந்நிலையில் தற்போது அவர் சூரியை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படமும் ரவிக்குமாரின் முந்தையப் படங்களைப் போல அறிவியல் புனைகதை படமாகதான் இருக்கும் என சொல்லப்படுகிறது. சூரி தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘மண்டாடி’ படத்தை முடித்ததும் இந்த படத்தைத் தொடங்குவார் என சொல்லப்படுகிறது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1