நாட்டின் புதிய பிரதமராக Éric Lombard ..??!!!

1 புரட்டாசி 2025 திங்கள் 10:30 | பார்வைகள் : 1288
பிரதமர் பிரான்சுவா பெய்ரு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு இடம்பெறுவதற்கு ஒருவார காலம் உள்ள நிலையில், புதிய பிரதமரை தேடும் படலம் ஆரம்பித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
2026 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் நிறைவேற்றுவதற்குள் அரசாங்கம் ஒரு பெரும் புயலுக்குள் சிக்கியுள்ளது. பாராளுமன்றத்தில் பெரும்பான்மை கொண்டிராத மக்ரோனின் அரசாங்கம், கவிழ்க்கப்பட்டு புதிய பிரதமர் - அமைச்சர்கள் கொண்ட புதிய அரசாங்கம் அமைக்கவேண்டிய கட்டாயம் ஏற்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தற்போது பொருளாதார அமைசராக உள்ள Éric Lombard புதிய பிரதமராக அறிவிக்கப்பட வாய்ப்புகள் உள்ளதாகவும், மக்ரோனின் மேசையில் அவரது பெயர் பலமுறை விவாதிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
67 வயதுடைய இவர் நீண்டகாலமாக நிதி மற்றும் பொருளியல் துறையில் இயங்கிவரும் தொழிலதிபர் மற்றும் அரசியல்வாதி என்பது குறிப்பிடத்தக்கது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1