புதிய மாதம்.. புதிய மாற்றங்கள்!!

1 புரட்டாசி 2025 திங்கள் 09:00 | பார்வைகள் : 868
இன்று செப்டம்பர் 1 ஆம் திகதி, புதிய மாதத்தில் புதிய பல்வேறு சட்டமாற்றங்களும், விதிமுறைகளும் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளன. அவற்றை தொகுக்கிறது இந்த பதிவு.
எரிவாயு கட்டணம்!!
எரிவாயு கட்டணம் இன்று முதல் சிறிய அளவில் வீழ்ச்சியடைகிறது. கட்டணம் 2.41% சதவீதத்தால் வீழ்ச்சியடைந்து கிலோவாட் மின்சாரக் கட்டணம் €0.10801 யூரோக்களில் இருந்து €0.10540 யூரோக்களாக வீழ்ச்சியடைகிறது. இதனால் வருடத்துக்கு €29 யூரோக்கள் வரை சேமிக்க முடியும் என தெரிவிக்கப்படுகிறது.
**************
புதிய குழந்தைகளுக்கு மூன்று புதிய பரிசோதனைகள்!!
புதிதாக பிறந்த குழந்தைகளுக்கு மூன்று புதிய பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுவது இன்று முதல் கட்டாயமாகிறது.
ஏற்கனவே புதிய குழந்தைகளுக்கு 13 பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வந்த நிலையில், இன்று முதல் மேலும் மூன்று பரிசோதனைகள் சேர்க்கப்பட்டு, மொத்தமாக 16 பரிசோதனைகளாக அதிகரிக்கப்பட்டுள்ளன.
- déficits immunitaires combinés sévères (DICS),
- l'amyotrophie spinale infantile (SMA) -
- le déficit en acyl-coenzyme A déshydrogénase des acides gras à chaîne très longue (VLCAD),
ஆகிய மூன்று பரிசோதனைகளே அவையாகும்.
***************
bronchiolitis விழிப்புணர்வு பிரச்சாரம்!!
குழந்தைகளுக்கு ஏற்படும் bronchiolitis எனும் மூச்சுக்குழாய் அழற்சி நோய்த்தாக்கம் தொடர்பில் அவதானமாக இருக்கும்படி அறிவுறுத்தப்படுகிறது. இன்று முதல் அது தொடர்பில் புதிய குழந்தைகளை கொண்டவர்களுக்கும், கர்ப்பிணி தாய்மார்களுக்கும் விழிப்புணர்வு பிரச்சார பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
***********
நக அலங்கார பொருட்கள் சிலவற்றுக்கு தடை!!
நக அலங்கார பொருட்களில் diphenyl trimethylbenzoyl phosphine oxide (TPO) (Formula: C22H21O2P) எனும் வேதியல் பொருள் பயன்படுத்த தடை விதிக்கப்படுகிறது. கடைகளில் தற்போது விற்பனையில் இருக்கும் ”நெயில் பொலிஷ்”
பொருட்களுக்கு விற்பனையாகும் வரை அனுமதி உள்ளதாகவும், அதன் பின்னர் மேற்படி வேதியல் பொருள் கலக்கப்படாத நெயில் பொலிஷ் பொருட்களுக்கு மட்டுமே விற்பனை அனுமதி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
**********
குருதி கொடையாளர்களுக்கான கால அவகாசம்..!!
குருதி கொடையாளர்கள் டாட்டு அல்லது உடம்பில் துளையிட்டு அலங்காரங்களில் ஈடுபட்டால் அவர்கள் நான்கு மாதங்களுக்கு இரத்த தானம் வழங்க முடியாது என இருந்த சட்டத்தை ஒன்று செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் 2 மாதங்களாக குறைத்துள்ளனர்.
பற்சிகிச்சையில் ஈடுபடுபவர்கள், எலும்பு தேய்மானம் போன்ற வியாதிகளுக்கு சிகிச்சை பெறுபவர்களுக்கு இருந்த தடையும் நீக்கப்பட்டுள்ளது. அவர்கள் சிரமமின்றி இரத்ததானம் வழங்க முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025