ஆப்கானிஸ்தானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்... அதிர்ந்த வீடுகள், கட்டிடங்கள் ; அச்சத்தில் மக்கள்

1 புரட்டாசி 2025 திங்கள் 07:53 | பார்வைகள் : 216
ஆப்கானிஸ்தானில் 31.08.2025 இரவு சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் எல்லை அருகே அமைந்துள்ள அந்நாட்டின் நகங்கர் மாகாணம் ஜலாலாபாத்தை மையமாக கொண்டு 8 கிலோ மீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 6.0 ஆக பதிவானது.
நிலநடுக்கத்தால் வீடுகள், கட்டிடங்கள் அதிர்ந்தன. இந்த நிலநடுக்கத்தால் 20 பேர் உயிரிழந்துள்ளனர்.
இரவு மக்கள் உறங்கிக்கொண்டிருந்த நேரத்தில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் பலரும் பதற்றத்துடன் வீடுகளை விட்டு வெளியேறி வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.
இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட 20 நிமிடம் கழித்து அதே மாகாணத்தில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.
இந்த நிலநடுக்கம் ரிச்டர் அளவில் 4.5 ஆக பதிவானது. அடுத்தடுத்து 2 நிலநடுக்கத்தால் நகங்கர் மாகாணத்தில் மக்கள் தஞ்சமடைந்துள்ளனர்.
4 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1