கனடாவில் நிலைநாட்டப்பட்ட கின்னஸ் உலக சாதனை

1 புரட்டாசி 2025 திங்கள் 06:53 | பார்வைகள் : 126
கனடாவில் மலையேற்ற நடை பயணத்தில் கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது.
கனடாவின் வெஸ்ட் வான்கூவரில் சனிக்கிழமை நீண்ட விடுமுறை தினத்தின் வெயிலில் ஆயிரக்கணக்கான வெளிப்புற விளையாட்டு ஆர்வலர்கள் ஒன்று கூடி, ஒரே நேரத்தில் அதிகமானோர் மலையேற்ற நடைப்பயணம் செய்த உலக சாதனையை முறியடித்தனர்.
உலகின் மிகப் பெரிய மலையேற்றம் எனப் பெயரிடப்பட்ட இந்த நிகழ்வை நியூசிலாந்தைச் சேர்ந்த வெளிப்புற உடை உற்பத்தி நிறுவனம் காத்மான்டு Kathmandu கனடாவில் தனது அறிமுகத்தை கொண்டாடும் விதமாக ஏற்பாடு செய்தது.
சுமார் 2,500 பேர் பதிவு செய்திருந்த நிலையில், 1,500 முதல் 2,000 பேர் வரை Cypress மலைக்குச் சென்று நான்கு கிலோமீட்டர் தூரம் ஸ்கை செயார் Sky Chair உச்சிவரை ஏறியதாக காத்மான்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன்மூலம், 2023 ஆம் ஆண்டு ஈராக் குர்திஸ்தானில் 815 பேர் ஒன்றாக ஏறிய சாதனையை வான்கூவர் மக்கள் முறியடித்துள்ளனர்.
கின்னஸ் உலக சாதனை அதிகாரிகள் சரியான எண்ணிக்கையை இன்னும் உறுதிப்படுத்திக் கொண்டிருக்கின்றனர்.
இந்த உலகச் சாதனை முயற்சியின் மூலம் சில சமூக நல அமைப்புகளுக்கு நிதி திரட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்வில் பங்கேற்றவர்களில் பலர், “சமூகமே ஒன்றிணைந்து ஆரோக்கியமான செயலில் பங்கேற்பது மகிழ்ச்சி தருகிறது” என தெரிவித்துள்ளனர்.
5 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1