25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலர்: த.வெ.க.,
1 புரட்டாசி 2025 திங்கள் 13:12 | பார்வைகள் : 952
தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின், மக்கள் சந்திப்பு பயணத்திற்கு முன், 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலரை நியமிக்க வேண்டும்' என, அக்கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த், மாவட்ட செயலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.
செப்., 15ல், விஜய் மக்கள் சந்திப்பு பயணத்தை துவக்க உள்ளார். இதற்காக, பல்வேறு வசதிகளுடன் கூடிய, நவீன பிரசார வேன் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த வேனில், கேரவனில் உள்ள அனைத்து வசதிகளும் இடம் பெற்றுள்ளன.
மக்கள் சந்திப்பின் போது, பிரசார வேனை தொண்டர்கள் நெருங்காமல் இருக்க, இரும்பு தகடுகள் பொருத்தப்பட்டுள்ளன. வேனில் நான்குபுறமும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
வாகனம் தயாரான நிலையில், கட்சியினரும் தயாராக கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது. தற்போது, கட்சியில் அமைப்பு ரீதியாக, ஒன்றியத்திற்கு ஒரு செயலர் உள்ள நிலையில், 25,000 வாக்காளர்களுக்கு ஒரு ஒன்றிய செயலர் நியமிக்கும்படி, மாவட்டச்செயலர்களுக்கு, கட்சியின் பொதுச்செயலர் ஆனந்த் உத்தரவிட்டுள்ளார்.
கட்சியில் பூத் கமிட்டி நிர்வாகிகள் நியமனம் ஒரு பக்கம் நடந்து வரும் நிலையில், மற்றொரு பக்கம் ஒன்றிய செயலர்களை நியமிக்கும் பணிகளும் துவக்கப்பட்டுள்ளன.
மக்கள் சந்திப்பு பயணத்தை விஜய் துவக்குவதற்கு முன்பாக, ஒன்றிய செயலர் நியமனத்தை முடிக்க வேண்டும் என கட்சித் தலைமை உத்தரவிடப்பட்டுள்ளது.






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்


















Annuaire
Scan