Paristamil Navigation Paristamil advert login

உள்ளாடைகளில் €10 மில்லியன் மதிப்புள்ள நகைகளுடன் பரிஸில் இருவர் கைது!!

உள்ளாடைகளில் €10 மில்லியன் மதிப்புள்ள நகைகளுடன் பரிஸில் இருவர் கைது!!

31 ஆவணி 2025 ஞாயிறு 23:16 | பார்வைகள் : 2584


ஆகஸ்ட் 30, சனிக்கிழமையன்று லியோனிலிருந்து ரயிலில் பரிஸ்சுக்கு  வந்த இரு துனிசிய நபர்களில் இதில் ஒரு சிறுவன் உட்பட காவல் துறையினரால் சோதனை செய்யப்பட்டனர். சோதனையின் போது, ஒருவர் தனது உள்ளாடைகளில் மதிப்புமிக்க நகைகள் மற்றும் ஒரு ரோலெக்ஸ் கடிகாரத்துடன் சாக்சை ஒளித்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களது சாமான்களில் ஒரு கிரைண்டரும் இருந்துள்ளது.

விசாரணையில், பறிக்கப்பட்ட பொருட்களில் ஒரு €5 மில்லியன் மதிப்புள்ள நகை, €2 மில்லியன் மதிப்புள்ள காதணிகள், ஒரு €1 மில்லியன் மதிப்புள்ள மோதிரம் மற்றும் பிற நகைகள் அடங்கியிருந்தன. மொத்தமாக €10 மில்லியனுக்கு மேற்பட்ட நகைகள் பறிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

இவர்கள் மீது "குழுவாக சேர்ந்து கொள்ளை செய்த பொருட்களை வைத்திருப்பது" என்ற வழக்கு பதிவு செய்யப்பட்டு, BRB விசாரணை நடத்தி வருகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்