Paristamil Navigation Paristamil advert login

பிரித்தானியாவில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்

பிரித்தானியாவில் டிஜிட்டல் அடையாள அட்டை அறிமுகம்

31 ஆவணி 2025 ஞாயிறு 18:27 | பார்வைகள் : 241


பிரித்தானியாவில் அனைவருக்கும் டிஜிட்டல் அடையாள அட்டையை அறிமுகப்படுத்தும் வாய்ப்பிருப்பதாக லேபர் அமைச்சர் Pat McFadden குறிப்பிட்டுள்ளார்.

இதனால், சட்டவிரோத புலம்பெயர் விவகாரம் கட்டுக்குள் வரலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். 

டிஜிட்டல் அடையாள அட்டையால் பிரித்தானியர்கள் தொழில்நுட்ப புரட்சிக்கு மாறும் நிலை ஏற்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், நீங்கள் ஒரு வேலைக்கு செல்கிறீர்கள் என்றால், நீங்கள் யார் என்று நீங்கள் நிரூபிக்க வேண்டியது முற்றிலும் நியாயமானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இன்னொரு லேபர் நாடாளுமன்ற உறுப்பினரான Jo White என்பவரும் அடையாள அட்டை தொடர்பில் குறிப்பிட்டுள்ளார். 

இது மோசடியைக் கையாள்வதற்கு உதவுவது மட்டுமல்லாமல், பிரிட்டிஷ் குடியுரிமையை அங்கீகரிப்பதாகவும் இருக்கும் என்றார்.

புலம்பெயர்ந்தோருக்கு டிஜிட்டல் அடையாள அட்டைகளை அறிமுகப்படுத்தும் திட்டங்களில் அமைச்சர்கள் பணியாற்றி வருவதாக ஏற்கனவே தகவல் ஒன்று கசிந்துள்ளது.

அந்த டிஜிட்டல் ஆவணம் அவர்களின் மொபைல் போனில் பதிவேற்றப்படும்.

மட்டுமின்றி, சிறு படகுகளில் பிரித்தானியாவில் நுழையும் சட்டவிரோத புலம்பெயர் மக்கள் விதிகளை மீறி, உணவு விநியோக வேலைகளில் ஈடுபட்டு வருவதற்கு எதிராக கடும் எதிர்ப்புகள் எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்