Paristamil Navigation Paristamil advert login

கிரீன் சிக்கன் 65

 கிரீன் சிக்கன் 65

31 ஆவணி 2025 ஞாயிறு 17:10 | பார்வைகள் : 118


சிக்கனில் பல விதமாக உணவுகள் இருந்தாலும் பெரும்பாலும் வீடுகளில் சிக்கன் கிரேவி, சிக்கன் 65 தான் சமைத்து சாப்பிடுவோம், இதற்கு சற்று மாறாக கிரீன் சிக்கன் 65 எப்படி சமைச்சு சாப்பிடுறதுன்னு பார்க்கலாமா

தேவையான பொருட்கள்;-சிக்கன், பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட், தயிர், மிளகு தூள், உப்பு, கரம் மசாலா, மல்லி பொடி, அரிசி மாவு, புதினா, எழுமிச்சை பழம், கருவேப்பிலை, பெரிய வெங்காயம்.

செய்முறை;-மிக்ஸியில் பச்சை மிளகாய், சீரகம், கொத்தமல்லி, இஞ்சி பூண்டு பேஸ்ட், ஆகியவற்றை சேர்த்து அரைத்து பேஸ்ட் ஆக ஆக்கி கொள்ளவும்.

சிக்கனை கழுவி சிறு சிறு துண்டுகளாக வெட்டி அரைத்து வைத்த பேஸ்டை அதில் ஊற்றிவிட்டு, பின் கொஞ்சம் தயிர் ஊற்றி, மிளகு தூள், கரம் மசாலா தூள், மல்லி பொடி, அரிசி மாவு மற்றும் தேவையான அளவிற்கு உப்பு சேர்த்து கொள்ளவும்.

இவை முழுவதும் சிக்கனில் படும் படி நன்றாக கலந்து 15 நிமிடம் அப்படியே வைக்கவும். கடாயை பத்து வைத்து எண்ணெய் ஊற்றி, சிக்கன் துண்டுகளை போட்டு பொறித்து எடுக்கவும்.

பொறித்த எடுத்த பின் எலுமிச்சை சாறு, புதினா, கருவேப்பிலை மற்றும் பெரிய வெங்காயத்தை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி வைத்தால் அசைத்தும் சுவையில் கிரீன் சிக்கன் 65 தயார். இந்த டிஸ்ஸ குழந்தைகள் விரும்பி விரும்பி சாப்பிடுவாங்க.

வர்த்தக‌ விளம்பரங்கள்