Paristamil Navigation Paristamil advert login

ரஷ்யாவின் ஆயுதங்களைக் கொண்டு பாலங்கள் அழிப்பு..! உக்ரைன் படைகள்

ரஷ்யாவின் ஆயுதங்களைக் கொண்டு பாலங்கள் அழிப்பு..! உக்ரைன் படைகள்

31 ஆவணி 2025 ஞாயிறு 16:38 | பார்வைகள் : 242


உக்ரைன் படைகள், ரஷ்யாவின் பெல்கரோட் பகுதியில் உள்ள இரண்டு முக்கிய பாலங்களை அழித்ததாக தெரிவித்துள்ளன.

இந்த பாலங்கள் உக்ரைனுக்கு அருகில் உள்ளவை, ரஷ்ய படைகள் தங்கள் வீரர்களுக்கு தேவையான பொருட்களை வழங்க பயன்படுத்தப்பட்டவை.

எதிரிகள் நெருங்கினால் தானாகவே வெடித்து அழிக்கும் என்பதற்காக, ரஷ்யா இந்த பாலங்களை கண்ணிவெடிகள் பதிக்கப்பட்ட நிலையில் வைத்திருந்தது.

ஆனால், உக்ரைன் படைகள் இந்த கண்ணிவெடிகள் வைக்கப்பட்டிருப்பதை கண்டறிந்து, அதையே பயன்படுத்தி ரஷ்யாவின் பாலங்களை அழித்தன.

இந்த தாக்குதலுக்கு வெறும் 600 முதல் 725 டொலர் மதிப்புள்ள first-person-view ட்ரோன்கள் மட்டுமே பயன்படுத்தப்பட்டன.

இந்த ட்ரோன்கள் fiber optics மூலம் ரஷ்யாவின் signal jamming-ஐ தாண்டி, பழத்தின் கீழ் உள்ள வெடிகுண்டுகளை படம் பிடித்து தாக்குதல் நடத்தின.

பொதுவாக, பாலங்களை அழிக்க ஏவுகணைகள் அல்லது விமானங்கள் தேவைப்படும். ஆனால், உக்ரைன் குறைந்த செலவில் சாமானிய ட்ரோன்களை மாற்றி அமைத்து பாரிய தாக்கங்களை ஏற்படுத்தி வருகிறது.

இதற்கு முன், ஜூன் மாதத்திலும், ரஷ்யாவின் விமான தளங்களில் பல விமானங்களை இத்தகைய ட்ரோன்கள் மூலம் அழித்தது.

உக்ரைன் இதன்மூலம், எதிரியின் குண்டுகளை வைத்து எதிரிகளையே வீழ்த்தி பூமராங் தாக்குதலை நடத்தியுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்