Paristamil Navigation Paristamil advert login

இயக்குனர் வெற்றிமாறனின் அதிரடி அறிவிப்பு !

இயக்குனர் வெற்றிமாறனின் அதிரடி அறிவிப்பு !

31 ஆவணி 2025 ஞாயிறு 16:10 | பார்வைகள் : 204


இயக்குனர் வெற்றிமாறன், தனது அடுத்த படமான எஸ்டிஆர்49 பற்றிய அப்டேட் இன்னும் சில நாட்களில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வாடிவாசல் திரைப்படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தள்ளிப்போய் கொண்டிருந்ததால், சிம்புவை வைத்து புதிய படத்தை இயக்கவுள்ளதாக அவர் அறிவித்தார். இப்படத்திகான ப்ரோமோ படப்பிடிப்பும் சமீபத்தில் நடைபெற்றது. ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தடைப்பட்டது மேலும் படம் கைவிடப்பட்டதாக இணையத்தில் வதந்திகள் பரவின.

இந்நிலையில், சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் பேசிய வெற்றிமாறன், எனது அடுத்த படமான எஸ்டிஆர்49 அப்டேட் இன்னும் 10 முதல் 15 நாட்களில் வெளியாகும். அதன் பின், தனுஷுடன் வடசென்னை 2 படத்தைத் தொடங்குவேன்” என்று கூறினார். இந்தச் செய்தி ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை அளித்துள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்