பரிஸ்: la Santé சிறையில் உள்ள கைதி தனது அறையில் கருகிய நிலையில்!!!

31 ஆவணி 2025 ஞாயிறு 16:08 | பார்வைகள் : 562
பரிஸ் XIV-இல் உள்ள la Santé சிறையில், 40 வயதான கைதி ஹமடி எஸ். (Hamady S.) தனது செல் அறையில் தீவைத்து எரிந்து உயிரிழந்துள்ளார். அவர் உளவியல் பிரச்சனைகள் கொண்டவர் என்றும், அக்டோபர் 2025-ல் விடுதலைக்குரியவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தீ விபத்தில் நான்கு கைதிகள் புகை மாசால் பாதிக்கப்பட்டுள்ளனர். இரு தளங்கள் காலியாக்கப்பட்டுள்ளன, மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்புத்துறையினர் தீயை கட்டுப்படுத்துவதில் ஈடுபட்டனர். சிறை நிரம்பிய நிலை மற்றும் மனித உரிமைகள் பிரச்சனை la Santé சிறையில் ஆகஸ்ட் 1ஆம் திகதியளவில் 189% சிறை அடர்த்தி பதிவாகியிருந்தது, இது பரிஸ் சிறையின் சராசரியை விட அதிகம்.
உரிமைகள் பாதுகாப்பாளர் கிளேர் ஹெடான் (Claire Hédon), கைதிகள் மீதான மனித உரிமை மீறல்கள் பற்றி எச்சரிக்கை விடுத்திருந்தார். சிறை நிரம்பிய நிலை, பணியாளர் பற்றாக்குறை, குறிப்பாக மருத்துவ சேவைகளின் கவனக்குறைவு போன்றவை இந்தச் சூழ்நிலையை மேலும் மோசமாக்குகின்றன. ஐரோப்பாவில் சிறை நிரம்பிய அளவில் பிரான்ஸ் மூன்றாவது இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
3 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025