Paristamil Navigation Paristamil advert login

அட்லி- அல்லு அர்ஜூன் கூட்டணியில் யோகி பாபு இணைகிறாரா ?

அட்லி- அல்லு அர்ஜூன் கூட்டணியில் யோகி பாபு  இணைகிறாரா  ?

31 ஆவணி 2025 ஞாயிறு 12:57 | பார்வைகள் : 186


புஷ்பா 2’ படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பின், அல்லு அர்ஜுன் தமிழ் இயக்குநர் அட்லீயுடன் இணைந்துள்ளார். ஷாருக்கான் நடித்த ஜவான் படத்தை இயக்கி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற அட்லீ, தற்போது அல்லு அர்ஜுன் நடிக்கும் AA22XA6 படத்தை இயக்க உள்ளார். அல்லு அர்ஜுன் – அட்லீ கூட்டணியில் உருவாகும் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிக அதிகமாக உள்ளது. இப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப்படம் இதுவரையில்லாத அளவில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகி வருவதாக கூறப்படுகிறது. ஏற்கனவே, இதில் கதாநாயகியாக தீபிகா படுகோனே இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது. தொடர்ந்து, மிருணால் தாகூர், ஜான்வி கபூர், ராஷ்மிகா மந்தனா, பாக்யஸ்ரீ ப்ரோஸ் ஆகியோரும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர் என கூறப்படுகிறது.

இந்திய சினிமாவில் இதுவரை பார்க்கப்படாத வகையில் ஒரு தனித்துவமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது. குறிப்பாக ஹாலிவுட் தொழில்நுட்ப கலைஞர்கள் இப்படத்தில் பணியாற்றுகிறார்கள். தற்போது, இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் யோகி பாபு நடிக்கவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்