Paristamil Navigation Paristamil advert login

நாடு முழுவதும் இடி மின்னல் தாக்குதல்! - மூன்று மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

நாடு முழுவதும் இடி மின்னல் தாக்குதல்! - மூன்று மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை!!

31 ஆவணி 2025 ஞாயிறு 08:27 | பார்வைகள் : 721


நாடு முழுவதும் இன்று ஓகஸ்ட் 31, ஞாயிற்றுக்கிழமை இடி மின்னல் தாக்குதல் பதிவாகும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. தெற்கு மாவட்டங்கள் மூன்றுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Lozère, Gard மற்றும் Ardèche ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அங்கு பலத்த இடி மின்னல் தாக்குதல்களுடன், மழை மற்றும் வெள்ள அனர்த்தம் ஏற்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

80 தொடக்கம் 100 மில்லிமீற்றர் மழை பதிவுக்கும், சில இடங்களில் 150 மில்லிமீற்றர் மழை பதிவாகவும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், இல்-து-பிரான்ஸ் மற்றும் அதனை சூழ உள்ள மாவட்டங்கள் தவிர்த்து, ஏனைய நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களுக்கு மஞ்சள் நிற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்