உக்ரேனின் மிகப்பெரிய உளவு கப்பல் மீது ரஷ்யா ட்ரோன் தாக்குதல்

30 ஆவணி 2025 சனி 16:29 | பார்வைகள் : 774
உக்ரேன் கடற்படையின் உளவுக் கப்பலான சிம்ஃபெரோபோல் கடற்படை கப்பல் ட்ரோன் தாக்குதலில் மூழ்கடிக்கப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் வியாழக்கிழமை (29) அறிவித்தது.
ரேடியோ, எலக்ட்ரானிக், ரேடார் மற்றும் ஆப்டிகல் உளவுத்துறைக்காக வடிவமைக்கப்பட்ட லகுனா-வகுப்பு, நடுத்தர அளவிலான கப்பல், டானூப் நதியின் டெல்டாவில் தாக்கப்பட்டது. அதன் ஒரு பகுதி உக்ரேனின் ஒடெசா பிராந்தியத்தில் உள்ளது என ரஷ்ய பாதுகாப்பு அமைச்சு அறிக்கை தெரிவித்துள்ளது.
உக்ரேன் அதிகாரிகளும் கப்பல் தாக்கப்பட்டதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்த தாக்குதலில் ஒரு பணியாளர் கொல்லப்பட்டதோடு, பலர் காயமடைந்தனர் என உக்ரேன் கடற்படை செய்தித் தொடர்பாளர் ஒருவரை மேற்கோள் காட்டி கீவ் இன்டிபென்டன்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
2019 இல் சிம்ஃபெரோபோல் கப்பல் தனது செயல்பாட்டை ஆரம்பித்து இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் உக்ரேன் கடற்படையில் இணைந்தது.