Paristamil Navigation Paristamil advert login

உலகளவில் அதிகரித்து வரும் நோய் தொற்று - உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்

உலகளவில் அதிகரித்து வரும் நோய் தொற்று - உலகச் சுகாதார அமைப்பு வெளியிட்ட தகவல்

30 ஆவணி 2025 சனி 08:47 | பார்வைகள் : 229


உலகின் 47 நாடுகளில் ஜூலை மாதத்தில் மட்டும், 3,924 குரங்கு அம்மை பாதிப்புகளும், அதனால் 30 பேர் பலியானதும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக, உலகச் சுகாதார அமைப்பு அறிவித்துள்ளது.

ஜூலை மாதத்தில், ஏராளமான நாடுகளில் பரவிய குரங்கு அம்மை நோய்க்கான உலக சுகாதார அமைப்பின் சூழ்நிலை அறிக்கையின் மூலம், குரங்கு அம்மை வைரஸின் அனைத்து வகைகளும் தொடர்ந்து பல்வேறு இடங்களுக்கு பரவி வருவது உறுதியாகியுள்ளது.

இதுகுறித்து, வெளியிடப்பட்ட அறிக்கையில், கடந்த ஜூலை மாதம், செனீகல், காங்கோ மற்றும் துருக்கி ஆகிய நாடுகளில் முதல்முறையாக, குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

இதில், செனீகல் நாட்டில் பதிவான குரங்கு அம்மையின் வகையைக் கண்டறியும் ஆய்வுகள் தற்போது வரை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, ஜூலையில், தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் நாடுகளில் குரங்கு அம்மை பரவல் அதிகரித்துள்ளது.

ஆனால், ஆப்பிரிக்கா, அமெரிக்கா மற்றும் ஐரோப்பியா ஆகிய கண்டங்களில் உள்ள நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்புகள் குறைந்துள்ளன.

இருப்பினும், 21 ஆப்பிரிக்க நாடுகளில் கடந்த 6 வாரங்களாக குரங்கு அம்மை பாதிப்புகள் பதிவாகியுள்ளன.

அதில், மேற்கு ஆப்பிரிக்க நாடுகளில், குரங்கு அம்மையின் கிளேட் IIb வகை வைரஸ் பரவலும், மத்திய ஆப்பிரிக்காவில் கிளேட் Ia, கிளேட் Ib என இருவகை வைரஸ் பரவலும் மற்றும் கிழக்கு ஆப்பிரிக்காவில் கிளேட் Ib வகை வைரஸ் பரவலும் கண்டறியப்பட்டுள்ளன.

இத்துடன், சீனா, ஜெர்மனி, துருக்கி மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளில் கடந்த ஜூன் மாதம் முதல் கிளேட் Ib வகை குரங்கு அம்மை வைரஸின் பரவல் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்