ஸ்ரீசாந்தை ஹர்பஜன்சிங் அறைந்த விவகாரம்...

30 ஆவணி 2025 சனி 08:47 | பார்வைகள் : 116
ஸ்ரீசாந்தை ஹர்பஜன்சிங் அறைந்த வீடியோ 17 ஆண்டுகளுக்கு பின்னர் வெளியாகியுள்ளது.
2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடரில், மும்பை இந்தியன்ஸ் பஞ்சாப் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ஹர்பஜன் சிங், ஸ்ரீசாந்தை அறைந்த சம்பவம் கிரிக்கெட் உலகில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இது குறித்து பேசிய அவர், "அன்று போட்டி முடிந்த பின்னர் அனைத்து கேமராக்களும் அணைக்கப்பட்டு விட்டது. பாதுகாப்பு கேமரா மட்டும் அணைக்கப்படாமல் இருந்தது. அதில் இந்த காட்சிகள் பதிவாகி இருந்தது" என தெரிவித்தார்.
இதில் போட்டி முடிந்த பின்னர் வழக்கம் போல் வீரர்கள் கைகுலுக்கும் போது, ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்தை அறைந்து விட்டு செல்வார். அப்போது அழுதுகொண்டே ஸ்ரீசாந்த் ஹர்பஜனை நோக்கி ஏதோ கூற, பஞ்சாப் அணித்தலைவர் ஜெயவர்த்தனே ஸ்ரீசாந்தை சமாதானம் செய்து கொண்டிருப்பார்.
மீண்டும் ஹர்பஜன் ஆவேசமாக ஸ்ரீசாந்தை நோக்கி வர, அங்கிருந்த பாதுகாவலர் மற்றும் இர்பான் பதான் அவரை தடுத்து அங்கிருந்து அழைத்து செல்வார்கள்.
இந்த சம்பவத்திற்காக, ஹர்பஜன் சிங் ஸ்ரீசாந்த்திடம் பலமுறை மன்னிப்பு கேட்டுள்ளார்.
சமீபத்தில் இது குறித்து பேசிய ஹர்பஜன் சிங், "நான் என் கிரிக்கெட் வாழ்வில் இருந்து ஒரு சம்பவத்தை நீக்க வேண்டும் என்றால், அது ஸ்ரீசாந்த் உடன் நடந்த சம்பவம் தான்.
சமீபத்தில், ஸ்ரீசாந்த் மகளிடம் நான் பேச சென்ற போது, நீங்கள் என் அப்பாவை அடித்தவர் என கூறி என்னிடம் பேச மறுத்து விட்டார். அது என் இதயத்தை நொறுக்கியது. நான் அவள் மனதில் எவ்வளவு மோசமான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளேன்" என தெரிவித்தார்.
2 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025