Paristamil Navigation Paristamil advert login

டொரொன்டோவில் பதிவான வைரஸ் தொற்று

டொரொன்டோவில் பதிவான வைரஸ் தொற்று

1 ஆவணி 2025 வெள்ளி 07:45 | பார்வைகள் : 210


கனடாவின் டொரொன்டோவில் வைரஸ் தொற்று தொடர்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

 

டொரொன்டோவில் முதல் மேனித மேற்கத்திய நைல் வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

நேற்றைய தினம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இந்த வைரஸ் தொற்று ஒரு முதியவரிடம் கண்டறியப்பட்டதாக டொரொன்டோ பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

 

 

மேற்கத்திய நைல் வைரஸ், தொற்றடைந்த நுளம்பு கடிக்கு பிறகு மனிதர்களுக்கு பரவுகிறது.

 

இந்த வைரஸின் அறிகுறிகள் ஒருவர் நுளம்பினால் கடிக்கப்பட்ட 2 முதல் 14 நாட்களுக்கு இடையில் தோன்றக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

காய்ச்சல், தலைவலி, மயக்கம், வாந்தி, போன்ற நோய் அறிகுறிகள் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

 

மக்கள் வெளியில் செல்லும்போது நுளம்புகடிகளை தவிர்க்க வெள்ளை நிற நீள கையுடைய சட்டை மற்றும் நீள கால்சட்டைகள் அணியுமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்