புஷ்கர் காயத்ரி இயக்கத்தில் சிவகார்த்திகேயன்…
 
                    31 ஆடி 2025 வியாழன் 13:00 | பார்வைகள் : 1173
தமிழ் சினிமாவில் ஓரம்போ படத்தின் மூலம் அறிமுகமான இயக்குனர் ஜோடி புஷ்கர்- காயத்ரி. ஆனால் அவர்களுக்குத் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் 2017 ஆம் ஆண்டு மாதவன்-விஜய் சேதுபதி நடிப்பில் அவர்கள் இயக்கிய ”விக்ரம் வேதா” திரைப்படம்தான்.
இந்த படம் வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது. அதையடுத்து அந்த படத்தை இந்தியில் ஹ்ரித்திக் ரோஷன் மற்றும் சயிஃப் அலிகான் ஆகியோரை வைத்து இயக்கினர். ஆனால் அந்த படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. அதன் பிறகு அவர்கள் வேறு எந்த படத்தையும் இயக்கவில்லை. தமிழில் சில வெப் சீரிஸ்களைத் தயாரித்து வந்தனர்.
இதையடுத்து தற்போது அவர்கள் சிவகார்த்திகேயனை வைத்து ஒரு படத்தை இயக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனர். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்க, சாம் சி எஸ் இசையமைக்கவுள்ளார். தற்போது இந்த படத்துக்கான முன்தயாரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.
        காப்புறுதி தேவைகளை தமிழில் நிறைவேற்றிக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan