Paristamil Navigation Paristamil advert login

விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் - சிறப்பம்சம்

விண்ணில் பாய்ந்த நிசார் செயற்கைக்கோள் - சிறப்பம்சம்

30 ஆடி 2025 புதன் 19:18 | பார்வைகள் : 123


இஸ்ரோ மற்றும் நாசாவின் கூட்டு தயாரிப்பில் உருவான நிசார் செயற்கைக்கோள் விண்ணில் ஏவப்பட்டுள்ளது.

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) மற்றும் அமெரிக்க விண்வெளி ஆய்வு மையம் (நாசா) இணைந்து உருவாக்கிய NISAR செயற்கைக்கோள் இன்று விண்ணில் ஏவப்பட உள்ளது.

2015 ஆம் ஆண்டு அன்றைய அமெரிக்க அதிபர் இந்தியா வந்த போது மேற்கொண்ட ஒப்பந்தத்தின் அடிப்படையில், இந்த செயற்கைக்கோள் அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது.

இன்று மாலை 5;40 மணியளவில், ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள 2வது ஏவுதளத்தில் இருந்து, ஜிஎஸ்எல்வி எப்-16 ராக்கெட் மூலமாக விண்ணில் ஏவப்பட்ட உள்ளது.

இந்த செயற்கைக்கோள் 2,393 கிலோ எடையும், சுமார் 5 ஆண்டுகள் ஆயுளும் கொண்டது.

இதில், நாசாவின் எல்-பேண்ட் ரேடார் மற்றும் இஸ்ரோவின் எஸ்-பேண்ட் ரேடார் பொருத்தப்பட்டுள்ளது. இது உலகின் முதல் இரட்டை ரேடார் செயற்கைகோள் ஆகும்.

எல்-பேண்ட் ரேடார், அடர்ந்த காடுகள், மண் மற்றும் நிலத்தடி அம்சங்களைக் கண்காணிக்கவும், எஸ்-பேண்ட் ரேடார் தாவர வளர்ச்சி மற்றும் நீர் மட்டங்களில் ஏற்படும் மாறுபாடுகள் போன்ற மேற்பரப்பு மட்ட மாற்றங்களைக் கண்டறியவும் பயன்படும்.

இந்த செயற்கைக்கோள் பூமியில் இருந்து 743 கி.மீ. தொலைவில் சூரிய ஒத்திசைவு சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட உள்ளது.

இந்த செயற்கைக்கோள் 1.5 பில்லியன் டொலர் (இந்திய மதிப்பில் ரூ.13,116 கோடி) என கூறப்படுகிறது. இதுவே உலகின் மிக விலையுயர்ந்த பூமி இமேஜிங் செயற்கைக்கோளாக கருதப்படுகிறது.

மேகங்கள், மூடுபனி, புகை, அடர்ந்த தாவரங்கள் மற்றும் பனிக்கட்டி வழியாக கூட ஊடுருவக்கூடிய சக்திவாய்ந்த ரேடார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி, பூமியின் மேற்பரப்பு மற்றும் வளிமண்டலத்தில் ஏற்படும் மாற்றங்களைக் கண்காணிக்க இந்த செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்த செயற்கைக்கோள் முழு பூமியையும் 12 நாட்களுக்கு ஒருமுறை சுற்றிவந்து, துல்லியமான தரவுகள் மற்றும் உயர் தெளிவுத்திறன் கொண்ட படங்களை இரவு, பகல் என அனைத்து சீதோஷ்ண நிலைகளிலும் வழங்கும்.

இதன் மூலம், பூகம்பங்கள், சுனாமிகள், எரிமலை வெடிப்புகள் மற்றும் நிலச்சரிவுகள் போன்ற இயற்கை ஆபத்துகளை மதிப்பிட முடியும். 

முக்கியமாக, கடல் பனி வகைப்பாடு, கப்பல் கண்டறிதல், கரையோர கண்காணிப்பு, புயல் கண்காணிப்பு, பயிர் நில வரைபடம் மற்றும் மண்ணின் ஈரப்பதத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஆகியவற்றை கண்காணிக்க முடியும்.

ஏவப்பட்ட முதல் 90 நாட்கள், விண்வெளிக்கு வெளியே விண்கலத்தை இயக்குவதற்கோ அல்லது சுற்றுப்பாதையில் சோதனை செய்வதற்கோ அர்ப்பணிக்கப்படும்.

இதன் நோக்கம், அறிவியல் செயல்பாடுகளுக்கு ஆய்வகத்தை தயார்படுத்துவதாகும் என்று இஸ்ரோ தெரிவித்துள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்