Paristamil Navigation Paristamil advert login

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் - தகுதி பெற்ற இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் விலகல்?

2028 ஒலிம்பிக் கிரிக்கெட் - தகுதி பெற்ற இந்தியா, இலங்கை, பாகிஸ்தான் விலகல்?

30 ஆடி 2025 புதன் 16:18 | பார்வைகள் : 428


2028 ஒலிம்பிக்கில் இடம்பெற உள்ள கிரிக்கெட்டில் இந்தியா நேரடி தகுதி பெற்றதாக தகவல் வெளியாகியுள்ளது.

உலகின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவான ஒலிம்பிக் போட்டிகள், 2028 ஆம் ஆண்டு அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகரில், நடைபெற உள்ளது.

128 ஆண்டுகளுக்கு பிறகு, ஒலிம்பிக் தொடரில் மீண்டும் கிரிக்கெட் போட்டி இடம் பெற்றுள்ளது.

லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள பொமோனாவில் உள்ள ஃபேர்கிரவுண்ட்ஸில் 2028 ஜூலை 12 ஆம் திகதி தொடங்கி, ஜூலை 29 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாளுக்கு 2 போட்டிகள் நடைபெற உள்ள நிலையில், லாஸ் ஏஞ்சல்ஸ் நேரப்படி முதல் போட்டி காலை 9:00 மணிக்கும் (இந்தியா நேரப்படி இரவு 9:30) 2வது போட்டி மாலை 6:30 மணிக்கும் (இந்தியா நேரப்படி மறுநாள் காலை 7:00) தொடங்கும்.

T20 வடிவத்தில் கிரிக்கெட் நடைபெற உள்ள நிலையில், ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் தலா 6 அணிகள் மட்டும் இடம் பெரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கப்பூரில் நடைபெற்ற ஐசிசியின் வருடாந்திர கூட்டத்தில், ஒலிம்பிக்கில் விளையாட உள்ள 6 அணிகளை பிராந்திய தகுதி முறையைப் பயன்படுத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

இதில் போட்டியை நடத்தும் நாடாக அமெரிக்கா நேரடி தகுதி பெறும். ஒவ்வொரு பிராந்தியத்திலும், T20 தரவரிசையில் முன்னணியில் உள்ள அணி தகுதி பெரும் என கூறப்படுகிறது.

 

இதன்படி, ஆசியாவில் இருந்து இந்தியாவும், ஓசியானியாவிலிருந்து அவுஸ்திரேலியாவும், ஐரோப்பாவில் இருந்து இங்கிலாந்தும் மற்றும் ஆப்பிரிக்காவில் இருந்து தென் ஆப்பிரிக்காவும் தகுதி பெரும் என தகவல் வெளியாகியுள்ளது.

 

இதில், இன்னும் ஒரு அணிக்கு வாய்ப்புள்ள நிலையில், அது எவ்வாறு தேர்வு செய்யப்படும் என முடிவு செய்யப்படவில்லை.

 

இந்த முறையால், பாகிஸ்தான், இலங்கை வங்கதேசம், நியூசிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெறாது என கூறப்படுகிறது.

 

மேலும், பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியங்கள் இந்த தேர்வு முறைக்கு அதிருப்தி தெரிவித்தாக தகவல் வெளியாகியுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்