Paristamil Navigation Paristamil advert login

போர் விமானிகளின் கைகளை கட்டிப்போட்டு விட்டீர்கள்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு

போர் விமானிகளின் கைகளை கட்டிப்போட்டு விட்டீர்கள்: லோக்சபாவில் ராகுல் குற்றச்சாட்டு

30 ஆடி 2025 புதன் 07:04 | பார்வைகள் : 179


ஆபரேஷன் சிந்துாரில் ஈடுபடுத்தப்பட்ட போர் விமானிகளின் கைகளை கட்டிப் போட்டு விட்டீர்கள். முழு சுதந்திரம் கொடுக்கவில்லை,'' என லோக்சபாவில் ராகுல் குற்றம் சாட்டினார்.

ஆபரேஷன் சிந்தூர் மீதான நடவடிக்கையில் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் பேசியதாவது: பஹல்காமில் கொடூரமான தாக்குதலை ஒருங்கிணைத்து நடத்தியது பாகிஸ்தான். இளைஞர்கள் மற்றும் முதியவர்கள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். இந்த அவையின் ஒவ்வொருவரும் இந்த சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்தோம். ஆபரேஷன் சிந்தூர் துவக்கிய உடனும், அதற்கு முன்னரும், எதிர்க்கட்சிகள் அனைத்தும், ஆயுதப்படைகளுக்கும், அரசுக்கும் உறுதியாக ஆதரவு தெரிவித்தன

எந்த ஒரு ராணுவ வீரருடன் நான் கை குலுக்கும்போது எல்லாம், அந்த வீரரை நாட்டுக்காக போராட தயாராக இருக்கும் புலியாக இருக்கிறேன். ஆனால், புலிக்கு முழு சுதந்திரம் தேவை. அவற்றை கட்டிப்போடக்கூடாது. இரண்டு முக்கிய வார்த்தைகள் உள்ளன.

அரசியல் உறுதி மற்றும் நடவடிக்கையில் சுதந்திரம். இந்திய ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை ஆகியவற்றை நீங்கள் பயன்படுத்த விரும்பினால், முதலில் 100 சதவீதம் அரசியல் உறுதி இருக்க வேண்டும் பஹல்காம் தாக்குதலில் பாதிக்கப்பட்டவரின் உறவினரை உ.பி.,யில் சந்தித்தேன். மனைவி முன்பு ஒருவர் கொல்லப்பட்டு உள்ளார். இது அனைத்து இந்தியர்களுக்கும் வேதனை அளித்தது. நடந்தது அனைத்தும் தவறு. நாம் அனைவரும் கண்டனம் தெரிவித்தோம்.

நான் ராஜ்நாத் சிங்கின் பேச்சை உன்னிப்பாக கவனித்தேன். அவர், ஆபரேஷன் சிந்தூர் அதிகாலை1:05 மணிக்கு துவங்கி, 22 நிமிடங்கள் நீடித்ததாக தெரிவித்தார். பிறகு, மிகவும் அதிர்ச்சியளிக்கும் விஷயத்தை தெரிவித்தார். அவர், ' நாம் பாகிஸ்தானை அதிகாலை1: 35 மணிக்கு அழைத்து, பதற்றத்தை அதிகரிக்கவிரும்பவில்லை. ராணுவம் இல்லாத இடங்களை மட்டுமே குறிவைத்தோம்' எனத் தெரிவித்தார். ஒரு வேளை அவர் என்ன வெளிப்படுத்தினோம் என்பதை அவருக்கு தெரியாமல் இருக்கலாம். நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள் என பாகிஸ்தானிடம் அவர் கூறியுள்ளார்.

நேற்று ராஜ்நாத் சிங், 1971ம் ஆண்டு நடந்த போரையும் ஆபரேஷன் சிந்தூரையும் ஒப்பிட்டு பேசினார். அப்போது இந்தியப் பெருங்கடல் வழியாக அமெரிக்காவின் ஏழாவது கடற்படை பிரிவு நெருங்கிக் கொண்டு இருந்தது.அப்போதைய பிரதமர் இந்திரா, வங்கதேசத்துக்காக நாம் என்ன செய்ய வேண்டுமோ அதை செய்ய வேண்டும்.எங்கு செல்ல வேண்டுமோ செல்ல வேண்டும் எனத் தெரிவித்தார்.

ராணுவ தளபதி ஜெனரல் மானெக்ஷாவிடம் 6 மாதங்கள், 1 வருடம் உங்களுக்கு தேவையான நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள்.உங்களுக்கு சுதந்திரம் உள்ளது என இந்திரா தெரிவித்தார். ஒரு லட்சம் பாகிஸ்தான் வீரர்கள் சரணடைந்தனர். ஒரு புதிய நாடு உருவாக்கப்பட்டது.

நீங்கள் பாகிஸ்தானுக்குள் சென்றீர்கள். பாகிஸ்தானின் வான் பாதுகாப்பை தாக்கவேண்டாம் என சொன்னீர்கள். விமானிகளின் கைகளை நீங்கள் கட்டிப் போட்டு விட்டீர்கள். இவ்வாறு ராகுல் பேசினார்.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்