Paristamil Navigation Paristamil advert login

பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை: பிரதமர் மோடி

பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை: பிரதமர் மோடி

30 ஆடி 2025 புதன் 05:59 | பார்வைகள் : 162


ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின்போது பாகிஸ்தானால் இந்தியாவின் பதிலடியை தடுக்க முடியவில்லை,'' என பிரதமர் மோடி கூறினார்.

லோக்சபாவில் ' ஆபரேஷன் சிந்தூர்' மீதான விவாதத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஆபரேஷன் சிந்தூரில் இந்தியாவின் நிலை என்ன என்பதை விளக்க வந்தள்ளேன். நாட்டிற்காக இந்த அவையில் உரையாற்றுகிறேன். இந்திய மக்களுக்கு எதிரானவர்களிடம் கண்ணாடியை காட்டுவேன். ஆபரேஷன் சிந்தூரின் பின்னணியை அறியாமல் இருளில் உள்ளவர்களுக்கு விளக்கம் தருகிறேன். பஹல்காம் தாக்குதல் மனிதாபிமானத்தின் மீதான கொடூர தாக்குதல்

மதத்தின் பெயரால் அப்பாவிகள் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அத்தகைய பயங்கரவாதிகளை ஒழித்துக்கட்ட உறுதிபூண்டுள்ளோம். 'அவர்கள் யோசிக்க முடியாத அளவுக்கு தண்டனை வழங்கப்படும். பயங்கரவாதத்தை மண்ணோடு மண்ணாக ஒழித்துக் கட்டுவோம்' என்று கூறியிருந்தேன். அதன்படி பதிலடி தாக்குதல் நடத்த ராணுவத்துக்கு முழு சுதந்திரம் அளித்து இருந்தோம்.

எங்கே , எப்போது,எப்படி தாக்குதல் நடத்த வேண்டும் என முடிவெடுக்க ராணுவத்துக்கு சுதந்திரம் அளிக்கப்பட்டது. நமது ஆயுதப்படைகள் மீது முழு நம்பிக்கை உள்ளது. எப்படி திட்டமிட்டோமா அந்தளவு துல்லிய தாக்குதல் நடத்தப்பட்டது பாகிஸ்தானால் இந்திய பதிலடியை தடுக்க முடியவில்லை.

பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகள் எங்கு மறைந்து இருந்தனரோ அங்கு தாக்குதல் நடத்தி அழித்தாம். பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. பாகிஸ்தானால் இனி அணு ஆயுதஅச்சுறுத்தல் விட முடியாது.

வர்த்தக‌ விளம்பரங்கள்