போரை நிறுத்தும்படி எந்த உலகத்தலைவரும் சொல்லவில்லை : பிரதமர் மோடி திட்டவட்டம்

30 ஆடி 2025 புதன் 04:57 | பார்வைகள் : 166
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது, தாக்குதலை நிறுத்தும்படி உலகின் எந்தத் தலைவரும் சொல்லவில்லை,'' என பிரதமர் மோடி கூறினார்.
லோக்சபாவில் ' ஆபரேஷன் சிந்தூர்' தொடர்பான விவாத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: பாகிஸ்தானால் இனி அணு ஆயுதஅச்சுறுத்தல் விட முடியாது. இந்தியா ஒரு போதும் பயப்படாது. இந்த மிரட்டலுக்கு இந்தியா அடிபணியவில்லை. இனி யாரும் நம்மிடம் அணு ஆயுத மிரட்டல் விட முடியாது. எதிரிகளை நமது படையினர் நிலைகுலையச் செய்தனர். இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட ஆயுதங்கள், ட்ரோன்கள் மூலம் பாகிஸ்தான் பயங்கரவாத முகாம்கள் அழிக்கப்பட்டன. முழு சுதந்திரம் கொடுத்ததால் இந்திய ராணுவம் சிறப்பாக செயல்பட்டு வெற்றியை ஈட்டியது. முப்படைகளும் கூட்டாக இணைந்து செயல்பட்டன. பாகிஸ்தானின் சில விமான படை தளங்கள் இன்னும் ஐசியூ.,வில் உள்ளது. பஹல்காம் தாக்குதல் நடந்ததும், இந்தியா பதிலடி தரும் பாகிஸ்தானுக்கு தெரிந்துவிட்டது.
ஆபரேஷன் சிந்தூர் மூலம் இந்தியாவின் வலிமையை உலக நாடுகள் உணர்ந்து கொண்டுள்ளன. பாகிஸ்தான் வாலாட்டி பார்த்தது. ஆனால் மண்டியிட வைத்தோம். இந்தியாவின் நடவடிக்கைக்கு எந்த நாடுகளும் ஆட்சேபனை தெரிவிக்கவில்லை. ஐ.நா.,வில் உள்ள 193 நாடுகளில் 3 நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவு அளித்தன. 22 நிமிடங்களில் பாகிஸ்தானை பழிதீர்த்தோம். இந்தியாவின் நடவடிக்கையால் பயங்கரவாதிகள் கதறி துடித்தனர். பயங்கரவாதிகள் மீதான நடவடிக்கையை எந்த நாடும் கண்டிக்கவில்லை. பயங்கரவாதிகள், பயங்கரவாதத்தில் ஈடுபடும் நாடுகளை பிரித்துப் பார்க்க முடியாது. இனி இந்தியா பதிலடி கொடுக்கும் என பயங்கரவாதிகளுக்கு தெரிந்துவிட்டது.
இந்தியாவுக்கு உலக நாடுகளின் ஆதரவு கிடைத்தது. ஆனால் காங்கிரசின் ஆதரவு மட்டும் கிடைக்கவில்லை. காங்கிரசின் விமர்சனம், ஆயதப்படைகளின் மாண்பை குழைத்தன. இந்திய அரசையும், பாதுகாப்பு படையினரையும் மட்டம் தட்டவே எதிர்க்கட்சிகள் தொடர்ந்து முயன்றன. எதிர்க்கட்சிகளின் கருத்து, இந்திய எல்லைக்கு வெளியே இருந்து வருவதைப் போன்றே இருந்தன. எதிர்க்கட்சிகள் என்னையே குறிவைத்து தாக்கின. மோடி தோற்றுவட்டார் என காங்கிரஸ் சந்தேகம் அடைந்தது. இந்தியா மீதும், ராணுவம் மீதும் எதிர்க்கட்சிகளுக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் மனங்களை காங்கிரசால் வெல்ல முடியாது. பாகிஸ்தானுக்கு ஆதரவாக காங்கிரஸ் முழு மூச்சாக செயல்படுகிறது.
ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை 100 சதவீதம் விமானப்படை உறுதி செய்தது. இந்த நடவடிக்கையின் குறிக்கோள் மிகத்தெளிவாக இருந்தது. எங்கள் இலக்கு பயங்கரவாதத்துக்கு எதிரானது என உலகத்துக்கே தெரிவித்துவிட்டோம். பாகிஸ்தானை மண்டியிட வைத்தோம். பயங்கரவாத்தின் மையத்தை ரோடு அழித்துவிட்டோம். பதிலடியை நிறுத்துங்கள் என பாகிஸ்தான் ராணுவம் கெஞ்சியது. தயவு செய்து நிறுத்துங்கள். இதற்கு மேல் தாங்க முடியாது என கதறியது. நமது பதிலடியை பல ஆண்டுகளுக்கு காங்கிரஸ் நினைவில் வைத்து இருக்கும். அமெரிக்க துணை அதிபர் மே 9 ம் தேதி என்னிடம் பேச முயன்றார். ஆனால் பேசவில்லை.
உலகத்தின் எந்தத் தலைவரும் தாக்குதலை நிறுத்தச் சொல்லவில்லை. பாகிஸ்தான் மிகப்பெரிய தாக்குதலை நடத்த திட்டமிட்டுள்ளதாக அமெரிக்க துணை அதிபர் வான்ஸ் தெரிவித்தார். அதற்கு நன்' அப்படி நடத்தினால், கடுமையான பதிலடி' கொடுக்கப்படும் தெரிவித்தேன். பாக்.,இனி என்ன செய்தாலும் கடுமையான பதிலடி கொடுக்கப்படம். மழு சக்தியுடன் இந்தியா தொடர்ந்து முன்னேறுகிறது. 'ஆபரேஷன் சிந்தூர்'நடவடிக்கை இன்னும் தொடர்கிறது. பாகிஸ்தான் மீண்டும் வாலாட்ட நினைத்தால் தக்க பதிலடி கொடுக்கப்படும்.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.