சைபர் தாக்குதலுக்கு இலக்கான Orange தொலைத்தொடர்பு நிறுவனம்!!

29 ஆடி 2025 செவ்வாய் 07:00 | பார்வைகள் : 682
Orange தொலைத்தொடர்பு நிறுவனம் சைபர் தாக்குதலுக்கு (cyberattaque) உள்ளானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 25, வெள்ளிக்கிழமை இந்த தாக்குதல் இடம்பெற்றதாகவும், பிரான்சில் சில சேவைகளை வழங்கமுடியாமல் உள்ளது எனவும் நேற்று ஜூலை 28, திங்கட்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்களின் தரவுகள் பாதுகாப்பாக உள்ளன எனவும், நிறுவனத்தின் சேவைகள் சிலவற்றை வழங்குவதற்கான செயற்பாடுகள் மட்டுமே தடைப்பட்டுள்ளதாகவும் Orange தெரிவிக்கிறது.
மீட்புப்பணிகள் இடம்பெற்று வருவதாகவும், ஓரிரு நாட்களில் அனைத்து சேவைகள் சீரடையும் எனவும், விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எவ்வாறாயிலும், அழைப்புகள், குறுந்தகவல்கள் மற்றும் இணைய சேவைகளை வழங்குவதில் எந்த தடையும் ஏற்படவில்லை.