Paristamil Navigation Paristamil advert login

பிக்பாஸ் தமிழ் 9-வது சீசன் தொகுப்பாளர் யார்...?

பிக்பாஸ் தமிழ் 9-வது சீசன் தொகுப்பாளர் யார்...?

28 ஆடி 2025 திங்கள் 17:55 | பார்வைகள் : 263


பிக்பாஸ் தமிழ் 9ஆவது சீசன் வரும் செப்டம்பர் மாதம் தொடங்கவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் பிரமாண்ட பொருட் செலவில் உருவாகும் நிகழ்ச்சி ‘பிக் பாஸ்’. 15 போட்டியாளர்கள் பல்வேறு டாஸ்குகளுடன் 100 நாட்கள் வீட்டில் தங்கியிருப்பார்கள். அதில் வெற்றியாளர்கள் இறுதியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். கடைசியாக பிக்பாஸ் 8வது சீசன் வெற்றிகரமாக முடிந்தது, அதன் வெற்றியாளராக முத்துக்குமரன் தேர்வானார், அந்த முடிவை மக்களும் கொண்டாடினார்கள்.

பிக்பாஸ் நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்கிய நிலையில், கடந்த சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். தமிழில் கடைசியாக 8வது சீசன் வரை ஒளிபரப்பானது, இந்த வருட ஜனவரி மாதம் தான் முடிவுக்கு வந்தது.

தற்போது 9வது சீசன் குறித்து என்ன தகவல் வெளியாகியுள்ளது. இந்த புதிய சீசன் செப்டம்பர் மாதமே தொடங்கப்பட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.  கமல்ஹாசனுக்குப் பதிலாக கடந்த சீசனில் தொகுத்து வழங்கிய விஜய் சேதுபதியே இம்முறையும் நிகழ்ச்சியை நடத்தவுள்ளதாக கூறப்படுகிறது.

பங்கேற்கவுள்ள போட்டியாளர்களை தேர்வு செய்யும் பணிகள், அடுத்த மாதம் தொடங்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. புதுவிதமான போட்டிகள், புதிய அரங்குகள், வித்தியாசமான நிபந்தனைகள் இம்முறை இருக்கலாம் எனவும் கூறப்படுகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்