’கங்குவா’ தோல்விக்கு பின் மீண்டெழுந்த சூர்யா..

28 ஆடி 2025 திங்கள் 16:55 | பார்வைகள் : 192
சூர்யா நடிப்பில் வெளியான ’கங்குவா’ திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை பெறாத நிலையில், அதை தொடர்ந்து வெளியான 'ரெட்ரோ' திரைப்படம் சுமாரான லாபத்தையே ஈட்டியது. இந்த சூழலில், தற்போது சூர்யா நடித்து முடித்துள்ள 'கருப்பு' திரைப்படம் வெளியீட்டிற்கு முன்னரே மிகப்பெரிய வணிக வெற்றியை பெரும் எனத் திரையுலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
கருப்பு' படத்தின் டிரெய்லர் வெளியானதும், அதற்கு அமோக வரவேற்பு கிடைத்ததை தொடர்ந்து, படத்தின் வணிகம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. ரிலீஸ் உரிமைகளை பெற விநியோகஸ்தர்கள் மத்தியில் கடும் போட்டி நிலவி வருகிறது. இதனால், படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டவுடன், வணிக பேச்சுவார்த்தைகள் தீவிரமடையும் என்றும், தயாரிப்புத் தரப்புக்கு இந்த படம் நல்ல லாபத்தைக் கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆர்.ஜே. பாலாஜி இயக்கத்தில், சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்துள்ள இந்தப்படம், சூர்யாவுக்கு ஒரு மிகப்பெரிய வெற்றிப் படமாக அமையும் என திரையுலகினர் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
'கருப்பு' திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகும் எனத்தகவல்கள் தெரிவிக்கின்றன. அதற்கு முன்னதாக, படத்தின் சாட்டிலைட் மற்றும் டிஜிட்டல் உரிமைகளை விற்பனை செய்வதற்கான பேச்சுவார்த்தைகளில் தயாரிப்புத் தரப்பு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.