Paristamil Navigation Paristamil advert login

கிரீசில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ

கிரீசில் வேகமாக பரவி வரும் காட்டுத்தீ

28 ஆடி 2025 திங்கள் 11:24 | பார்வைகள் : 219


கிரீஸ் நாட்டில் காட்டுத் தீ வேகமாகப் பரவி வருவதாகச் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அங்கு தற்போது வெப்பமான காலநிலை நிலவும் நிலையில் தொடர்ந்தும் காட்டுத் தீ பரவினால், வெப்பம் மேலும் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே, அங்குள்ள சில பகுதிகளில் வெப்பநிலையானது 44 பாகை செல்சியசாக பதிவாகியுள்ளது.

 

கிரீசில் ஏற்பட்டுள்ள தீப்பரவலால், அண்டை நாடான துருக்கி இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வெப்பநிலையைப் பதிவு செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்