எந்த இந்திய ஜாம்பவானையும் செய்யாத சாதனை: ரவீந்திர ஜடேஜா புதிய வரலாறு

28 ஆடி 2025 திங்கள் 11:24 | பார்வைகள் : 118
இங்கிலாந்துக்கு எதிரான நான்காவது டெஸ்டில் ரவீந்திர ஜடேஜா இமாலய சாதனை படைத்தார்.
ஓல்ட் டிராஃப்போர்டில் நடந்த இங்கிலாந்து, இந்தியா அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் டிராவில் முடிந்தது.
கடைசி நாளில் கில், ராகுல், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தரின் ஆட்டம் பிரமிக்க வைத்தது. குறிப்பாக ரவீந்திர ஜடேஜாவும், வாஷிங்டன் சுந்தரும் இங்கிலாந்து அணிக்கு கடுமையான நெருக்கடி கொடுத்தனர்.
இருவரும் அபார சதம் விளாசி இந்திய அணி போட்டியை டிரா செய்ய உதவினர். இந்த டெஸ்டில் பல சாதனைகள் படைக்கப்பட்டன.
இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் போட்டிகளில் 1000 ஓட்டங்கள் மற்றும் 30 விக்கெட்டுகள் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற வரலாற்று சாதனையை ரவீந்திர ஜடேஜா (Ravindra Jadeja) படைத்தார்.
அத்துடன் SENA டெஸ்டில் 6வது வரிசையில் களமிறங்கி இரண்டாவது சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையையும் அவர் படைத்தார்.
கே.எல்.ராகுல், சுப்மன் கில் கூட்டணி 3வது விக்கெட்டுக்கு 417 பந்துகளை எதிர்கொண்டது. இங்கிலாந்தில் எந்த விக்கெட்டுக்கும் ஒரு இந்திய கூட்டணியின் மிக நீண்ட பார்ட்னர்ஷிப் இதுவாகும்.
டெஸ்ட் வரலாற்றில் இரண்டாவதாக துடுப்பாடும் அணிகள் 300+ இன்னிங்ஸ் முன்னிலைப் பெற்ற 127 டெஸ்ட் போட்டிகளில், 13 போட்டிகள் மட்டுமே டிராவில் முடிந்துள்ளன.
அதேபோல், முதலில் துடுப்பாடிய இந்திய அணி 300க்கும் மேற்பட்ட போட்டிகளில் முன்னிலை வகித்த பிறகு, அந்த 6 போட்டிகளை டிரவாக மாற்றியுள்ளது.