இலங்கையில் கோர விபத்து - வேன் டயர் வெடித்ததில் 2 பெண்கள் மரணம்

28 ஆடி 2025 திங்கள் 11:24 | பார்வைகள் : 190
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் அங்குனுகொலபெலஸ்ஸ 175 கி.மீ கட்டை அருகில் ஞாயிற்றுக்கிழமை மாலை 5.30 மணியளவில் பயணித்த வேன் டயர் வெடித்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
வெலிகம , தெனிபிட்டிய மற்றும் வரகாபிட்டிய பகுதிகளைச் சேர்ந்த 40 , 60 வயதுடைய நிலுகா மற்றும் ஞானவதி என்ற இரண்டு பெண்கள் விபத்தில் உயிரிழந்தனர்.
மேலும் விபத்தில் காயமடைந்த நால்வர் அங்குணகொலபெலஸ்ஸ பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் மேலதிக சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
விபத்து தொடர்பாக அங்குணகொலபெலஸ்ஸ அதிவேக நெடுஞ்சாலை சோதனைச் சாவடியில் உள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.