ரஷ்யா- வடகொரியா இடையே நேரடி விமான சேவை

28 ஆடி 2025 திங்கள் 10:24 | பார்வைகள் : 814
உக்ரைன்-ரஷ்யா இடையே 2022-ம் ஆண்டு போர் தொடங்கியது.
இந்த போரில் உக்ரைனுக்கு ஆதரவாக ஐரோப்பிய நாடுகள் செயல்படுகின்றன.
அதேபோல் ரஷ்யாவுக்கு அதன் நட்பு நாடான வடகொரியா ராணுவ உதவியை வழங்கி வருவதனால் இரு நாடுகள் இடையேயான உறவில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டு உள்ளது.
இதற்கிடையே கடந்த மாதம் ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் இருந்து வடகொரியா தலைநகர் பியாங்க்யாங் இடையே ரெயில் சேவை தொடங்கப்பட்டது.
ஆனால் இதன் பயண நேரம் சுமார் 10 நாட்கள் ஆகும் என்பதனால், ரஷ்யா-வடகொரியா இடையே நேரடி விமான சேவை தொடங்க இரு நாடுகளும் நடவடிக்கை எடுத்து வந்தன.
அந்தவகையில் தற்போது மாஸ்கோ-பியாங்க்யாங் இடையே நேரடி விமான சேவை நேற்று தொடங்கியது.
இந்த விமானம் வாரத்துக்கு 2 முறை இயங்கும் என ரஷ்ய விமான போக்குவரத்து நிறுவனமான ரோசாவியாட்சியா தெரிவித்துள்ளது.
10 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025