Paristamil Navigation Paristamil advert login

அணு மின் நிலையத்தில் பறந்த ட்ரோன்கள் - ஜப்பானில் பீதியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

அணு மின் நிலையத்தில் பறந்த ட்ரோன்கள் - ஜப்பானில் பீதியை ஏற்படுத்தியுள்ள சம்பவம்

28 ஆடி 2025 திங்கள் 09:24 | பார்வைகள் : 248


ஜப்பான் அணு மின் நிலையத்தில் அடையாளம் தெரியதா 3 ட்ரோன்கள் பறந்த சம்பவம் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பானின் தென்கிழக்கு பகுதியில் உள்ள கென்காய் அணு மின் நிலையத்தில் கடந்த சனிக்கிழமை இரவு மூன்று ட்ரோன்கள் பறந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 இந்த தகவலை ஜப்பானின் அணுக்கழிவு மேற்பார்வை ஆணையம் (NRA) வெளியிட்டது.

இந்த மின் நிலையத்தில் நான்கு அணு ஒழுங்குபடுத்திகளை கொண்டிருக்க, அதில் இரண்டு தற்போது செயலிழக்கச் செய்யப்படும் நிலையில் உள்ளன. 

மீதமுள்ள இரண்டும் புதுப்பிக்கப்பட்ட பாதுகாப்பு விதிமுறைகள் பின்பற்றி செயல்படுகின்றன.

ஜப்பானில் அணு மின் நிலையங்கள் அருகே அனுமதியின்றி ட்ரோன் இயக்கம் குற்றமாகும், என NRA மற்றும் காவல்துறை தெரிவித்தன.

NRA-வின் செய்தித் தொடர்பாளர் கூறியதாவது:- “ட்ரோன்கள் காணப்பட்டதையடுத்து உடனடியாக அறிக்கை வழங்கப்பட்டது. 

ஆனால் மின் நிலையத்தின் வளாகத்தில் எந்தவித அசம்பாவிதமும் இல்லை. ட்ரோன்கள் உள்ளே நுழைந்ததற்கான ஆதாரமும் இல்லை.”

“ட்ரோன்கள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை. அவற்றை இயக்கியவர்கள் யார் என்றும் தற்போது அடையாளம் காணப்படவில்லை.” என காவல்துறை செய்தித் தொடர்பாளர் மசாஹிரோ கோஷோ கூறியுள்ளார்.

இந்த சம்பவம், 2011-ஆம் ஆண்டு உருவான ஃபுகுஷிமா அணு விபத்தின் பின்னர், அணு உற்பத்திக்கு மீண்டும் திரும்பியுள்ள ஜப்பான் அரசுக்கு ஒரு பாதுகாப்பு சவாலாக உள்ளது.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்