Paristamil Navigation Paristamil advert login

காட்டுத்தீ பரவும் அபாயம்! - இரு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

காட்டுத்தீ பரவும் அபாயம்! - இரு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை!!

28 ஆடி 2025 திங்கள் 08:34 | பார்வைகள் : 339


 

காட்டுத்தீ பரவும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டு இரு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பிரான்சின் தெற்கு மாவட்டமான Bouches-du-Rhône மற்றும் Vaucluse ஆகிய இரு மாவட்டங்களுக்கும் சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த எச்சரிக்கை தொடர்பில் அங்கு வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்கும்படியும், எரிபொருட்களை கொள்கலன்களில் சேமிக்கவோ, வாகனங்களில் எடுத்துச் செல்லவோ வேண்டாம் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது. சிகரெட் பட்ஸ்களை அணைக்காமல் வீதியில் வீசுவோர்கள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, இதே தீ பரவும் ஆபத்து காரணமாக : Aude , Gard, Hérault, Pyrénées-Orientales மற்றும் Var ஆகிய ஐந்து மாவட்டங்களுக்கு செம்மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்