ஐரோப்பிய நாடுகளுக்கு அதிக வரி - ட்ரம்புடன் பேச்சுவார்த்தை!!

27 ஆடி 2025 ஞாயிறு 21:42 | பார்வைகள் : 393
ஐரோப்பிய நாடுகளது ஏற்றுமதி வரி அதிகரிப்பது தொடர்பில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருந்தார். இன்று ஜூலை 27, ஞாயிற்றுக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
'பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது' என ட்ரம்ப் அறிவித்துள்ளார். முதலில் 30% சதவீத வரி அறவிடப்படும் என அறிவித்திருந்த ட்ரம்ப், பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். ஓகஸ்ட் 1 ஆம் திகதியுடன் பேச்சுவார்த்தைக்கான கால அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.
நான்கு நாட்கள் இருக்கும் நிலையில், இன்று இந்த பேச்சுவார்த்தை இடம்பெற்றது. அதன் முடிவில் 15% சதவீத வரியுடன் அமெரிக்காவுக்கான ஏற்றுமதி தொடரும் என தீர்வு எட்டப்பட்டுள்ளது.