Saint-Ouen சிறுவர்களுக்கு ஊரடங்கு! - பொதுமக்கள் விசனம்!!

27 ஆடி 2025 ஞாயிறு 19:43 | பார்வைகள் : 4159
Saint-Ouen நகரில் சிறுவர்களுக்கு இரவு நேரத்தில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பல வாரங்களாக இந்த தடை தொடர்வதாகவும், அதனை நீக்க வேண்டும் எனவும் குறித்த நகரில் வசிக்கும் மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.
Saint-Ouen நகரில் 16 வயதுக்கு குறைந்த சிறுவர்களுக்கு கடந்த ஜூலை 16 ஆம் திகதி முதல் இரவு நேரங்களில் வெளியே செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இரவு 11 மணியில் இருந்து காலை 6 மணிவரை இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்த தடையினை நீக்கச் சொல்லி நகர மக்கள் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். இது விடுமுறை காலமாகவும், வெப்பமான காலமாகவும் இருப்பதால், இந்த தடையை நீக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025