யுக்ரேனுக்கான உதவிகள் தொடரும் - ஜனாதிபதி மக்ரோன்!

27 ஆடி 2025 ஞாயிறு 16:13 | பார்வைகள் : 274
யுக்ரேனுக்கான ஆதரவு தொடரும் எனவும், ரஷ்யா மீதான அழுத்தம் தொடரும் எனவும் ஜனாதிபதி இம்மானுவல் மக்ரோன் தெரிவித்துள்ளார்.
இன்று யுக்ரேனிய ஜனாதிபதி செலன்ஸ்கியை தொலைபேசியூடாக தொடர்புகொண்ட மக்ரோன், அவரோடு நீண்ட நிமிடங்கள் உரையாடினார். அதன் முடிவில் இதனை அவர் தெரிவித்தார். யுக்ரேன் யுத்தத்தின் பிடியில் உள்ளபோதும், அது ஜனநாயகத்துடன் செயற்படுகிறது. மெல்ல மெல்ல ‘ஐரோப்பிய பாதையில்’ முன்னேறி வருகிறது” என மக்ரோன் குறிப்பிட்டார்.
அதேவேளை, ரஷ்யா மிதான அழுத்தங்களை அதிகரிக்கும் முயற்சிகளும் இடம்பெற்று வருவதாகவும், யுக்ரேனில் ஊழக்கு எதிராக பல கட்டுப்படுகளை கொண்டுவருவது தொடர்பில் கலந்துரையாடியதாகவும் மக்ரோன் குறிப்பிட்டார்.