பரிஸில் பிரேசிலிய சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த வீட்டுக்குள் கொள்ளையடிப்பு!!

27 ஆடி 2025 ஞாயிறு 15:43 | பார்வைகள் : 422
பரிஸின் 14வது வட்டாரத்தில், இரண்டு பிரேசிலிய சுற்றுலாப் பயணிகள் தங்கியிருந்த ஏர்பிஎன்பி (Airbnb) வாடகை வீட்டில் சனிக்கிழமை இரவு கொள்ளையடிக்கப்பட்டுள்ளது.
குற்றவாளிகள் வாசலைத் தட்டி, வலுக்கட்டாயமாக உள்ளே நுழைந்து, அவர்களை முழங்காலில் அமர வைத்து கழுத்துக்கு கத்தி வைத்து மிரட்டி, 6 ஐபோன்கள் மற்றும் 80 யூரோக்கள் பணத்தை பறித்துள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உடல் ரீதியாக பாதிக்கப்படவில்லை ஆனால் கடுமையாக அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம், பரிஸில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் அதிகரித்து வரும் "home-jacking" எனப்படும் வீட்டு கொள்ளையடிப்பு சம்பவங்களில் ஒன்றாகும்.
2023இல் பரிஸ் மற்றும் அருகிலுள்ள பகுதிகளில் 515 சம்பவங்களும் 2024இல் இது 550 சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. விசாரணை அதிகாரிகள் இந்த குற்றம் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும், 2025இல் மேலும் மோசமாகலாம் என எதிர்பார்க்கின்றனர்.