Paristamil Navigation Paristamil advert login

வெள்ளை பிரியாணி

வெள்ளை பிரியாணி

27 ஆடி 2025 ஞாயிறு 15:06 | பார்வைகள் : 111


உணவு பிரியர்கள் பெரும்பாலும் அதிகம் விரும்புவது பிரியாணி வகைகளை தான். அந்த பிரியாணி வகைகளில் முக்கியமானது ஹைதராபாத் பிரியாணி, ஆம்பூர் பிரியாணி, தலப்பாகட்டி பிரியாணி, தம் பிரியாணி மற்றும் வெஜ் பிரியாணி இவை அனைத்தும் அனைவரும் அறிந்ததே. இங்கு நம்மில் பலருக்கும் தெரியாத பிரியாணி ஒன்று உள்ளது. அதுதான் கொங்குநாடு வெள்ளை பிரியாணி. இதை எப்படி வீட்டிலேயே சமைப்பது என்பதைப் பற்றி பார்ப்போம்.

கொங்கு நாடு வெள்ளை பிரியாணி குறிப்பாக, கோயம்புத்தூர் மற்றும் ஈரோடு பகுதிகளில் இந்த வெள்ளை பிரியாணி பிரபலமாக உள்ளது. இது ஒரு தனித்துவமான சுவை மற்றும் மணம் கொண்டது. மேலும், இது பெரும்பாலும் கோழி அல்லது ஆட்டிறைச்சியுடன் தயாரிக்கப்படுகிறது. மேலும் இது ஒரு தனித்துவமான வெள்ளை நிறத்தைக் கொண்டுள்ளதால் வெள்ளை பிரியாணி என்று பெயர்.

வெள்ளை பிரியாணி செய்ய தேவையான பொருட்கள்:  சின்ன வெங்காயம் இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சோம்பு பட்டை கிராம்பு இறைச்சி ( ஆடு, கோழி) அல்லது சோயா போன்ற தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு, இவை அனைத்தையும் சேர்த்து மசாலா தயார் செய்து கொள்ள வேண்டும்.

பின்னர், பிரியாணிக்கு தேவையான சோயாவை வேகவைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனுடன் தயார் செய்த மசாலாவையும், தயிரையும் சேர்த்து 30 நிமிடங்கள் ஊற வைத்துக் கொள்ளவும்.

ஒரு கடாயில் எண்ணெய், சிறிதளவு நெய் விட்டு, வெங்காயம் கறிவேப்பிலை போட்டு நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். பொன்னிறம் வந்தவுடன் புதினா சேர்த்து நாம் தயார் செய்த சோயா மசாலாவையும், கொத்தமல்லி மற்றும் உப்பு சிறிதளவு சேர்த்து பச்சை வாசனை போக நன்றாக வதக்கி கொள்ள வேண்டும்.

எண்ணெய் பிரிந்து வந்ததும் தேவையான தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்த உடன் எலுமிச்சைச்சாறு மற்றும் ஊற வைத்த சீரக சம்பா அரிசி சேர்த்துக் கொள்ள வேண்டும். தண்ணியும் அரிசியும் ஒரே அளவு வந்தவுடன் தோசை கல் மீது வைத்து மிதமான வெப்பத்தில் 20 நிமிடங்கள் தம் போட்டு இறக்கினால், நல்ல கமகம சூடான சுவையான கொங்கு நாடு வெள்ளை பிரியாணி ரெடி.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்