காசாவின் சில பகுதிகளில் இராணுவநடவடிக்கை நிறுத்தம் - இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு

27 ஆடி 2025 ஞாயிறு 12:18 | பார்வைகள் : 665
மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் மூலோபாய அடிப்படையிலான இராணுவநடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது.
இஸ்ரேலிய இராணுவம் நடவடிக்கையில் ஈடுபடாத அல்மவாசி,டெய்ர் அல் பலா, காசா நகரம் ஆகியபகுதிகளில் மறுஅறிவித்தல்வரும் வரை இராணுவநடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் இந்ததீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
காசா பள்ளத்தாக்கில் மனிதாபிமான பொருட்களையும் மருந்துகளையும் விநியோகிக்கும் ஐநாவினதும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளினதும் வாகனத்தொடரணி பயணிப்பதற்கான பாதுகாப்பான வழிகள் குறித்து அறிவிக்கப்படு;ம் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025