பெரு நாட்டில் கோர விபத்து - 18 பேர் பலி

27 ஆடி 2025 ஞாயிறு 07:54 | பார்வைகள் : 196
பெரு நாட்டில் பேருந்து விபத்திற்குள்ளானதில் 18 பேர் பலியாகினர்.
தென் அமெரிக்க நாடான பெருவின் டர்மா மாகாணத்தில், சொகுசு பேருந்து ஒன்று லா மெர்ஸிடிற்கு 60க்கும் மேற்பட்டோருடன் பயணித்தது.
பேருந்து டால்கா மாவட்டத்திற்கு அருகில் வளைந்து செல்லும் குறுகிய சாலையில் சென்றது.
அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்ததால் பேருந்து சாலை அருகே உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் 18 பேர் உயிரிழந்ததுடன் 24 பேர் காயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து அனைவரையும் மீட்டனர்.
மேலும் காயமடைந்தவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதுடன், இந்த விபத்து குறித்து பொலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.