Paristamil Navigation Paristamil advert login

வட கொரியாவிற்கு முதல் பயணிகள் விமான சேவையை முன்னெடுக்கும் நாடு

வட கொரியாவிற்கு முதல் பயணிகள் விமான சேவையை முன்னெடுக்கும் நாடு

27 ஆடி 2025 ஞாயிறு 07:54 | பார்வைகள் : 265


மாஸ்கோவிலிருந்து வட கொரியாவின் தலைநகர் பியோங்யாங்கிற்கு நேரடி பயணிகள் விமான சேவைகளை ரஷ்யா தொடங்கும் என்று அந்த நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2022ல் உக்ரைன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பைத் தொடர்ந்து, இரண்டு முன்னாள் கம்யூனிஸ்ட் கூட்டணி நட்பு நாடுகளும் தங்கள் உறவுகளை மேம்படுத்த நடவடிக்கை எடுத்து வருகிறது.

 

இந்த நிலையில், 1990களின் நடுப்பகுதிக்குப் பிறகு முதல் முறையாக இரண்டு நாடுகளின் தலைநகரங்களுக்கு இடையே வழக்கமான விமான சேவைகளை தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது.

 

 

ஜூன் மாதத்தில் இருந்தே மாஸ்கோ-பியோங்யாங் பயணிகள் ரயில் சேவை மீண்டும் தொடங்கப்பட்டது. இதனிடையே, வட கொரியாவிற்கான முதல் விமானம் ரஷ்யாவின் ஷெரெமெட்டியேவோ விமான நிலையத்திலிருந்து உள்ளூர் நேரப்படி மாலை 7 மணிக்குப் புறப்படும்.

 

இந்த எட்டு மணி நேர விமானப் பயணத்தை 440 பயணிகள் பயணிக்கக்கூடிய போயிங் 777-200ER விமானம் மேற்கொள்ளும். பயணச் சீட்டுகளின் விலை 44,700 ரூபிள் ($563) இல் தொடங்கின என்றும், முதல் விமானத்திற்கான அனைத்து டிக்கெட்டுகளும் விரைவாக விற்றுத் தீர்ந்துவிட்டது என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

 

ரஷ்யாவின் சிவில் விமானப் போக்குவரத்து ஆணையமான Rosaviatsia, மாஸ்கோவிற்கும் பியோங்யாங்கிற்கும் இடையே வாரத்திற்கு இரண்டு முறை விமானங்களை இயக்க நோர்ட்விண்ட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு அனுமதி வழங்கியுள்ளது.

 

ஆனால், தற்போதைக்கு விமானங்கள் மாதத்திற்கு ஒரு முறை இயக்கப்படும் என்று போக்குவரத்து அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 

ரஷ்யாவிற்கும் வட கொரியாவிற்கும் இடையிலான ஒரே நேரடி விமானப் பாதை, வட கொரிய விமான நிறுவனமான ஏர் கோரியோ ரஷ்யாவின் தூர கிழக்கில் உள்ள விளாடிவோஸ்டாக்கிற்கு வாரத்திற்கு மூன்று முறை விமானங்களை இயக்குவதாகும்.

 

 

வர்த்தக‌ விளம்பரங்கள்