தெற்கு சிரியாவில் உள்நாட்டு மோதல்! - பரிசில் பேச்சுவாத்தை!!
26 ஆடி 2025 சனி 20:41 | பார்வைகள் : 2518
சிரியாவின் தெற்கு நகரமான Suwayda இல் கடந்த ஒருவாரமாக இடம்பெற்று வரும் இரு ஆயுதக்குழுக்களுக்கிடையிலான மோதல் தொடர்பாக இன்று ஜூலை 26, பரிசில் பேச்சுவார்த்தை ஒன்று இடம்பெற்றது.
இந்த பேச்சுவார்த்தையில் சிரியாவின் அதிகாரிகளும், இஸ்ரேலிய அதிகாரிகளும் கலந்துகொண்டனர். பிரெஞ்சு ஜனாதிபதி மக்ரோன் கலந்துகொண்டார். அமெரிக்கா மத்தியஸ்தம் வகித்தது.
சிரியாவின் தெற்கு நகரமான Suwayda இல் பெருமளவில் வசிக்கும் Druze இன மக்கள் மீது Bedouins இனத்தின் ஆயுதக்குழு தாக்குதல் மேற்கொண்டது.
அதை அடுத்து, Druze இன மக்களை காப்பாற்றும் நோக்கில் இஸ்ரேல் களமிறங்கி பதில் தாக்குதல் மேற்கொண்டது. இந்த தாக்குதல் பூதாகரமாக வெடிக்கும் அபாயம் எழுந்ததால், அதனை பேச்சுவார்த்தை மூலம் நிறுத்த அமெரிக்கா முயற்சிகளை மேற்கொண்டது.
அதன் ஒரு அங்கமாகவே பரிசில் இன்று சனிக்கிழமை இந்த சந்திப்பு இடம்பெற்றது.
🔥 இன்றைய சிறப்பு சலுகை
17 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்
திரு இராஜேந்திரம் சரவணபவானந்தன்
Crégy-lès-Meaux, France, மாதகல் மேற்கு - Sri Lanka
வயது : 75
இறப்பு : 11 Feb 2026
-
1






திருமண பொருத்தம்
குழந்தைகள் பெயர்
இன்றைய ராசி பலன்










Ajouter
Annuaire
Scan