X வலைத்தள வழக்கு தொடர்பில் பிரஞ்சு நீதித்துறை மீது அமெரிக்கா விமர்சனம்!!!

26 ஆடி 2025 சனி 14:20 | பார்வைகள் : 535
அமெரிக்கா, பிரான்ஸின் நீதிமன்றம் சமூக வலைதளம் X-ஐ எதிர்த்து தொடங்கிய குற்றவியல் விசாரணையை கடுமையாக விமர்சித்துள்ளது.
அமெரிக்க அரசின் மனித உரிமைகள் மற்றும் மக்களாட்சி பிரிவு, ஒரு "பிரெஞ்சு வக்கீல் X-ஐ தீய செயற்குழுவாக வகைப்படுத்தி, அதன் சொந்த அல்காரிதத்தை கேட்கிறார்" என குற்றம்சாட்டியுள்ளது. மேலும், இது சுதந்திரக் கருத்துகளை அடக்கும் செயல் என்றும், வெளிநாட்டு தணிக்கையை எதிர்த்து அமெரிக்கா தனது மக்கள் உரிமைகளை பாதுகாக்கும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆனால் பரிஸ் நீதிதுறை இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. அவர்கள், ஜூலை 9ஆம் திகதி விசாரணையை தொடங்கியதற்கு, வெளிநாட்டு தாக்கங்களை உள்வாங்கும் வகையில் X தனது பரிந்துரை முறைமையை மாற்றியுள்ளதாக பல புகார்கள் வந்ததை காரணமாக கூறுகின்றனர்.
அல்காரிதத்தை தொழில்நுட்பமாக பரிசோதிக்க மட்டுமே கேட்டதாகவும், தனிப்பட்ட தரவுகள் ஏதும் கோரப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர். X நிறுவனம் தன் அல்காரிதத்தை Open Source-ஆக வெளியிடுவதாக வாக்குறுதி அளித்திருந்தாலும் அது இதுவரை நிறைவேற்றப்படவில்லை.