ஒலிம்பிக் போட்டிகளின் ஆரம்பநாள் - முதலாவது ஆண்டு கொண்டாட்டம்!!

26 ஆடி 2025 சனி 06:00 | பார்வைகள் : 3513
ஒலிம்பிக் போட்டிகள் சென்றவருடம் இதே நாளில் ஆரம்பமாகியி, உலகத்தின் பார்வை முழுவதும் பரிசிலும் சென் நதியிலும் நிலைத்திருந்தது. அதன் நிறைவுநாள் கொண்டாட்டம் ஒன்று இடம்பெற உள்ளது.
ஆரம்பநாள் நிகழ்வின் போது 80 படகுகளில் உலகம் முழுவதிலும் இருந்து பங்கேற்ற வீரர்களை அழைத்துக்கொண்டு சென் நதியில் பவணி வந்தார்கள். அந்த நிகழ்வை ஞாபகப்படுத்தும் விதமாக இன்று ஜூலை 26, சனிக்கிழமை மாலை 30 படகுகள் சென் நதியில் அணிவகுக்க உள்ளன.
இந்த படகு அணிவகுப்பில் 150 பேருக்கான இலவச அனுமதியும் வழங்கப்பட்டுள்ளன. நிகழ்வுகளை தொலைக்காட்சிகளில் நேரலையாக பார்வையிட முடியும்.