பாலஸ்தீன ஆர்வலர்கள் மீதான தடையை நீக்குக.... பிரித்தானியாவிற்கு ஐ.நா கோரிக்கை

26 ஆடி 2025 சனி 05:36 | பார்வைகள் : 1652
Palestine Action என்ற செயற்பாட்டாளர் குழு மீதான பிரித்தானியாவின் தடையை ஐ.நா. மனித உரிமைகள் தலைவர் கடுமையாக சாடியுள்ளார்.
பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தைத் தவறாகப் பயன்படுத்துவதாகவும், பிரித்தானிய அரசாங்கம் தனது முடிவை ரத்து செய்ய வேண்டும் என்றும் ஐ.நா மன்றம் வலியுறுத்தியுள்ளது.
Palestine Action என்ற செயற்பாட்டாளர் குழு மீதான பிரித்தானியாவின் இந்த முடிவு பொருத்தமற்றதாகவும் தேவையற்றதாகவும் தோன்றுவதாக குறிப்பிட்டுள்ள Volker Turk, பாலஸ்தீன நடவடிக்கை குழுவில் ஈடுபட்டுள்ள மற்றும் அதை ஆதரிக்கும் பலரின் உரிமைகளை இது கட்டுப்படுத்துகிறது, ஆனால் அவர்கள் எந்தவொரு அடிப்படை குற்றச் செயலிலும் ஈடுபடவில்லை.
மாறாக கருத்துச் சுதந்திரம், அமைதியான கூட்டம் மற்றும் ஆதரவு தெரிவித்தல் ஆகியவற்றிற்காக தங்கள் உரிமைகளைப் பயன்படுத்தியுள்ளனர் என அறிக்கை ஒன்றில் Volker Turk குறிப்பிட்டுள்ளார்.
பிரித்தானிய அரசாங்கம் Palestine Action குழுவை தடைசெய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பாக அறிவித்து ஜூலை 5, 2025 முதல் தடை செய்தது.
இந்த முடிவானது சிவில் உரிமைகள் குழுக்கள், ஐ.நா. நிபுணர்கள், பிரித்தானிய கலாச்சார பிரமுகர்கள் மற்றும் நூற்றுக்கணக்கான சட்டத்தரணிகளால் விமர்சிக்கப்பட்டது.
7 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

திரு. நாகேந்திரராஜா பாலசுப்பிரமணியம்
பரிஸ், பிரான்ஸ், தொல்புரம், இலங்கை
வயது : 70
இறப்பு : 02 Sep 2025
12 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

காசிப்பிள்ளை இராஜலிங்கம்
செவ்ரோன் - பிரான்ஸ:, நயினாதீவு 7ம் வட்டாரம்
வயது : 79
இறப்பு : 28 Aug 2025
-
1