Paristamil Navigation Paristamil advert login

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் - ஒருவார கால அவகாசம்! - 50-50 வாய்ப்பு என்கிறார் ட்ரம்ப்!

ஐரோப்பிய ஒன்றியத்துடன் ஒப்பந்தம் - ஒருவார கால அவகாசம்! - 50-50 வாய்ப்பு என்கிறார் ட்ரம்ப்!

25 ஆடி 2025 வெள்ளி 17:14 | பார்வைகள் : 949


ஐரோப்பிய ஒன்றியத்துடன் வர்த்தக உடன்படிக்கை அழைப்புக்காக ட்ரம்ப் ஒரு கால அவகாசத்தை வழங்கியிருந்தார். இன்னும் ஒருவாரத்தில் இந்த அவகாசம் நிறைவடைகிறது.

இந்நிலையில், அமெரிக்கா- ஐரோப்பிய நாடுகள் ஒப்பந்தம் இடம்பெற 50-50 சதவீத வாய்ப்புகள் மட்டுமே உள்ளதாக ட்ரம்ப் இன்று அறிவித்தார். ஜூலை 1 ஆம் திகதிக்கு முன்னர் பேச்சுவார்த்தைக்கு வரவேண்டும் என ஐரோப்பிய ஒன்றியத்துக்கு அழைப்பு விடுத்திருந்தார் ட்ரம்ப். பின்னர் அதனை ஓகஸ்ட் 1 ஆம் திகதி வரை பிற்போட்டிருந்தார். 

இந்நிலையில், இன்று வாஷிங்டனில் வைத்து ஊடகவியலாளர்களைச் சந்தித்த ட்ரம்ப், அதன்போது “பேச்சுவார்த்தைக்கு 50-50 சதவீத வாய்ப்புகள் மட்டுமே உள்ளன. அதற்கும் குறைவாக இருக்கலாம்” என தெரிவித்தார். அதன் பின்னர் அவர் ஸ்கொட்லாந்துக்கு புறப்பட்டார். 

ஐரோப்பிய நாடுகளில் இருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 30% சதவீத வரி அறவிடப்படும் என்பதே ட்ரம்பின் அறிவிப்பாகும். அது நடைமுறைக்கு வந்தால் ஐரோப்பிய ஏற்றுமதியில் பாரிய பின்னடைவு ஏற்படும் என தெரிவிக்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்