மக்ரோனை மீண்டும் சீண்டிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப்!!

25 ஆடி 2025 வெள்ளி 16:14 | பார்வைகள் : 1084
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிப்பது தொடர்பில் மக்ரோன் வெளியிட்ட கருத்தை, ட்ரம்ப் ‘பெரிதாக எடுத்துக்கொள்ளத்தேவையில்லை’ என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
வரும் செப்டம்பரில் இடம்பெற உள்ள ஐ.நா மாநாட்டில் மக்ரோன் பாலஸ்தீனத்தை தனி நாடாக பிரகடனப்படுத்துவார் என நேற்றைய தினம் அறிவித்திருந்தார். இதற்கு உடனடியாகவே பல ஆதரவு மற்றும் எதிர்ப்பு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன. இந்நிலையில், ஜனாதிபதி மக்ரோனின் இந்த கருத்து தொடர்பில் டொனால்ட் ட்ரம்ப் தெரிவிக்கையில், “அவர் ஒரு நல்ல மனிதர். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும், ஆனால் அவரது அறிக்கை பாரதூரமானது இல்லை. அதனை கணக்கில் கொள்ளத்தேவையில்லை” என தெரிவித்தார்.
மக்ரோனை ஆரம்பம் முதல் புறங்கையால் தள்ளி வருகிறதும், அவரை கிண்டல் கேலி செய்வதுமாக ட்ரம்ப் நடந்துவருகிறார். முன்னதாக பிரிஜித் மக்ரோனிடம் மக்ரோன் அடிவாங்கியிருந்த சம்பவம் தொடர்பிலும் ட்ரம்ப் கிண்டல் அடித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.