Paristamil Navigation Paristamil advert login

கட்டுநாயக்க விமான நிலையத்தில் கனடா பிரஜை கைது

கட்டுநாயக்க விமான நிலையத்தில்  கனடா பிரஜை கைது

25 ஆடி 2025 வெள்ளி 14:40 | பார்வைகள் : 3570


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சுமார் 400 மில்லியன் ரூபா மதிப்புள்ள போதைப்பொருட்களுடன் 52 வயது கனடா பிரஜை ஒருவர் இன்று காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

குறித்த சந்தேகநபர், கனடாவின் ஒன்ராறியோவைச் சேர்ந்தவர் என தெரிவிக்கப்படுகிறது.

சந்தேகநபர் கனடாவிலிருந்து கட்டாரின் தோஹா வழியாக கட்டுநாயக்கவிற்கு வந்திருந்தார்.

சந்தேகநபரின் பயணப் பொதிகளை சோதனையிட்டபோது, அதில் 12 கிலோ 196 கிராம் ஹஷீஷ் மற்றும் 5 கிலோ 298 கிராம் கொக்கேய்ன் ஆகிய போதைப்பொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பிரிவு மேற்கொண்டு வருகிறது.
 

வர்த்தக‌ விளம்பரங்கள்