மக்ரோனை பாராட்டிய முகமட் அப்பாஸ்!!

25 ஆடி 2025 வெள்ளி 12:16 | பார்வைகள் : 779
பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கும் முயற்சியில் பிரான்ஸ் ஈடுபட்டுள்ளதை பாலஸ்தீனர அரச அதிபர் முகமட் அப்பாஸ் வரவேற்றுள்ளார்.
வரும் செப்டம்பரில் இடம்பெற உள்ள ஐ.நா உச்சிமாநாட்டில் மக்ரோன் இந்த அங்கீகாரத்தை அறிவிக்க உள்ளதாக தெரிவித்துள்ளார். இதற்கு பல உலக நாடுகள் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றன. நூற்றாண்டுகால பிரச்சனையை முடிவுக்கு கொண்டுவர ’இரு நாடுகள்’ தீர்வே சரியாக இருக்கும் என மக்ரோன் தெரிவிக்கிறார்.
இந்நிலையில், “பாலஸ்தீனியர்களின் இலட்சியத்துக்கான ஒரு வெற்றி” என பாலஸ்தீன அரச அதிபர் முகமட் அப்பாஸ் தெரிவித்துள்ளார்.”பாலஸ்தீனர்களுக்கான நில உரிமையும், தாயக உணர்வையும் பிரான்ஸ் பிரதிபலிக்கிறது” எனவும் அவர் தெரிவித்தார்.
மக்ரோனின் இந்த முடிவை சோசலிச கட்சியினர் வரவேற்றுள்ளனர். காஸாவில் இடம்பெறும் இனப்படுகொலைகு ஒரு தீர்வாக இது அமையும் என அவர்கள் கருதுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.